1,008 திருவிளக்கு பூஜை

சிவகிரி அருகே ராயகிரியில் 1,008 திருவிளக்கு பூஜை நடந்தது

Update: 2022-10-10 18:45 GMT

சிவகிரி:

சிவகிரி அருகே உள்ள ராயகிரி இந்து நாடார் உறவு முறைக்கு பாத்தியப்பட்ட தெற்கு மாரியம்மன் கோவிலில் புரட்டாசி மாத பொங்கல் திருவிழா நடைபெற்று வருகிறது. நிகழ்ச்சிக்கு நாடார் உறவின் முறை கமிட்டி தலைவர் அம்மையப்பன் நாடார் தலைமை தாங்கினார். செயலாளர் சண்முகானந்தம் நாடார் முன்னிலை வகித்தார். பொருளாளர் இளஞ்செழியன், பள்ளிச்செயலாளர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாலை பாரத ரத்னா காமராஜர் கலையரங்கத்தில் வைத்து அம்மன் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜை, ஆராதனை, புஷ்பாஞ்சலி பூஜை, சுமங்கலி பூஜை, மாலை 6 மணி அளவில் 1008 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து இரவில் நகைச்சுவை நிகழ்ச்சி நடைபெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்