பிலிப்பைன்ஸ் நாட்டைத் தாக்கிய சூப்பர் சூறாவளி நோரு வலுவிழந்தது

சூப்பர் சூறாவளி ‘நோரு’ வலுவிழந்து சூறாவளியாக மாறியுள்ளதாக பிலிப்பைன்ஸ் நாட்டின் தேசிய காலநிலை சேவை மையம் தெரிவித்துள்ளது.

Update: 2022-09-29 15:36 GMT

மணிலா,

பிலிப்பைன்ஸ் நாட்டைத் தாக்கிய சூப்பர் சூறாவளி 'நோரு' இந்த ஆண்டின் 16-வது சூறாவளியாக கருதப்படுகிறது. அதே சமயம் இந்த ஆண்டு பிலிப்பைன்ஸ் நாட்டைத் தாக்கும் முதல் சூறாவளி இது என்றும், அந்நாட்டின் தலைநகர் பகுதியை இது கடுமையாக தாக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது.

இதனை தொடர்ந்து பல பகுதிகளில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தலைநகர் மணிலாவில் மோசமான வானிலை காரணமாக 5 சர்வதேச விமானங்கள் மற்றும் 44 உள்நாட்டு விமானங்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில் சூப்பர் சூறாவளி 'நோரு' வலுவிழந்து சூறாவளியாக மாறியுள்ளது என பிலிப்பைன்ஸ் நாட்டின் தேசிய காலநிலை சேவை மையம் தெரிவித்துள்ளது. அதே சமயம் போலில்லோ தீவு பகுதிகளில் சூறாவளியின் தாக்கல் அதிகம் இருப்பதால், அங்குள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்