வடகொரியாவின் தொடர் அச்சுறுத்தல்களால் பாதுகாப்பு திறனை அதிகரிக்கும் தென்கொரியா..!!

நாட்டின் பாதுகாப்பு திறனை அதிகரிக்க போவதாக தென் கொரியா தெரிவித்துள்ளது.

Update: 2022-06-12 10:00 GMT

Image Courtesy : AFP 

சியோல்,

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களையும், உலக நாடுகளின் எதிர்ப்பையும் கண்டுகொள்ளாமல் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. மேலும், தென்கொரியாவுடன் போர் பயிற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் அமெரிக்காவுக்கு அதிர்ச்சி வைத்தியமாகவும் இந்த சோதனைகள் அமைந்துள்ளன.

அதே நேரத்தில் வடகொரியாவின் ஏவுகணை சோதனைகளுக்கு பதிலடியாக அமெரிக்கா மற்றும் தென்கொரியா, 8 ஏவுகணைகளை கடந்த வாரம் சோதனை செய்ததாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் வடகொரியாவின் அணுஆயுதம் மற்றும் ஏவுகணை அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள தங்கள் நாட்டின் பாதுகாப்பு திறனை அதிகரிக்க போவதாக தென் கொரியா தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் நடைபெற்ற ஆசிய பாதுகாப்பு கூட்டத்தில் பங்கேற்று பேசிய தென் கொரியா நாட்டின் பாதுகாப்பு மந்திரி லீ ஜாங்-சுப் கூறுகையில், "எங்கள் அரசாங்கம் வட கொரியாவின் அணுசக்தி மற்றும் ஏவுகணை அச்சுறுத்தல்களைத் தடுக்க பாதுகாப்பு திறன்களை வியத்தகு முறையில் மேம்படுத்தும். மேலும் அமெரிக்கா மற்றும் ஜப்பானுடன் இது தொடர்பாக மிகவும் நெருக்கமாக செயல்படுவோம்" என கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்