லைவ் அப்டேட்ஸ்: உக்ரைன் போரில் ரூ.45 லட்சம் கோடி சொத்துகள் அழிப்பு

உக்ரைன் மீதான ரஷியாவின் போர் இப்போது கிழக்கு உக்ரைன் மீதான போர் போன்று ஆகி விட்டது. அங்கு ரஷிய படைகள் தங்கள் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகின்றனர்.

Update: 2022-05-28 00:26 GMT


Live Updates
2022-05-28 14:52 GMT

கிழக்கு உக்ரைனில் முக்கிய ரெயில் நிலையத்தை கைப்பற்றியதாக ரஷியா தெரிவித்துள்ளது. உக்ரைனின் கிழக்கு நகரங்களை குறிவைத்து தீவிர தாக்குதல் நடத்தி வரும் ரஷியா, நடப்பு வாரத்தில் மட்டும் உக்ரைனின் இரண்டு சிறிய நகரங்களை கைப்பற்றியுள்ளது.

20 ஆயிரம் மக்கள் தொகை கொண்ட லிமன் நகரத்தை ரஷிய மற்றும் உக்ரைன் பிரிவினைவாத படைகள் இணைந்து கைப்பற்றியிருப்பதாக இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2022-05-28 08:36 GMT

ரஷியப் படைகள் முன்னேறி வருவதால், கிழக்கு உக்ரைனில் உள்ள கிராமங்கள் மற்றும் நகரங்களில் இருந்து பொதுமக்கள் தொடர்ந்து வெளியேறி வருகின்றனர்.

2022-05-28 08:10 GMT

ரஷியாவின் காஸ்ப்ரோம், உக்ரைன் வழியாக ஐரோப்பாவிற்கு எரிவாயுவைத் தொடர்ந்து அனுப்புகிறது

ரஷிய எரிவாயு உற்பத்தியாளரான காஸ்ப்ரோம், சுத்ஷா நுழைவாயில் வழியாக, ஐரோப்பாவிற்கு எரிவாயு விநியோகம் 43.96 மில்லியன் கன மீட்டர் (mcm) ஆக நேற்று முன்தினம் இருந்தது என்றும் , இது நேற்று 43.6 மில்லியன் கன மீட்டரிலிருந்து சற்று உயர்ந்துள்ளது என்று தெரிவித்துள்ளது.

2022-05-28 07:37 GMT

உக்ரைனின் லுஹான்ஸ்க் பிராந்தியத்தி பிராந்தியத்தில் சுமார் 10,000 ரஷிய ராணுவ வீரர்கள் உள்ளனர்- கவர்னர்

கிழக்கு பிராந்தியத்தில் சுமார் 10,000 ரஷிய ராணுவ வீரர்கள் இருப்பதாக உக்ரைனின் லுஹான்ஸ்க் பிராந்தியத்தின் கவர்னர் இன்று அதிகாலை தெரிவித்தார். 

2022-05-28 07:27 GMT

ரஷிய படைகள் கிழக்கு உக்ரைனை கைப்பற்ற தாக்குதலை தீவிரமாக்கியுள்ளதாகவும் லுஹான்ஸ்க் பிராந்தியத்தில் தாக்குதல் தீவிரம் அடைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

2022-05-28 07:18 GMT

ரஷிய உக்ரைன்போர் கடந்த 3 மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. இந்த போரினால் 4031 பொதுமக்கள் உயிரிழந்திருப்பதாக ஐ.நா. தெரிவித்துள்ளது. இதில் குழந்தைகள் மட்டும் 261 பேர் உயிரிழந்துள்ளனர். 4,735 பொதுமக்கள் படுகாயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகப்படியான மரணங்கள் டோநெட்ஸ்க், லூஹான்ஸ்க் பகுதிகள் நடந்துள்ளது. அந்த பகுதியில் மட்டும் 2,274 பொதுமக்கள் இறந்துள்ளனர்.

2022-05-28 00:31 GMT

ரஷிய படைகள் உக்ரைனின் கிழக்கு டான்பாஸ் பகுதியில் உள்ள நகரங்களைச் சுற்றி வளைக்க முயற்சித்து வருவதாகவும் பல கிராமங்களை அவர்கள் கைப்பற்றியுள்ளனர் என்றும் இங்கிலாந்து பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் உக்ரைனுக்கு ராணுவ ரீதியாக தொடர்ந்து ஆதரவளிப்பது முற்றிலும் இன்றியமையாதது என இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார்.

2022-05-28 00:27 GMT

உக்ரைன் போரில் ரஷியா அழித்துள்ள சொத்துகளின் மதிப்பு 564-600 பில்லியன் டாலர் (சுமார் ரூ.42 லட்சத்து 30 ஆயிரம் கோடி முதல் ரூ.45 லட்சம் கோடி) இருக்கும் என்று கீவ் பொருளாதார கல்லூரி கணித்து கூறி உள்ளது.

துறைமுக நகரமான மரியுபோலில் ரஷிய படைகளின் தாக்குதலில் தரை மட்டமான தொழிற்சாலை ஒன்றின் இடிபாடுகளின் அடியில் 70 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்