மொரீஷியஸ் நாட்டின் புதிய பிரதமராகிறார் நவீன் ராம்கூலம்

2 தேர்தலிலும் வெற்றி பெற்ற ஆயுதப்படை சமூகவுடைமை இயக்கம் இம்முறை பெரும் தோல்வியை தழுவியது.;

Update: 2024-11-11 18:45 GMT

போர்ட் லூயிஸ்,

இந்தியப் பெருங்கடலில் உள்ள குட்டித் தீவு நாடு மொரிஷியஸ். இந்தநாட்டில் நேற்று முன்தினம் (நவ. 10) நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 70 உறுப்பினர்களில் 62 பேர் தேர்தல் மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவர். வாக்குப்பதிவு நிறைவுபெற்ற நிலையில், நேற்று (நவ. 11) வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது.அதில் கடந்த 2 முறை நடைபெற்ற பொதுத்தேர்தல்களிலும் வெற்றி பெற்ற பிரதமர் பிரவீந்த் குமார் ஜுக்நாத் தலைமையிலான ஆயுதப்படை சமூகவுடைமை இயக்கம்(எம்எஸ்எம்) இம்முறை பெரும்பான்மை இடங்களில் தோல்வியை தழுவியது.

பிரதான எதிர்க்கட்சியான முன்னாள் பிரதமர் டாக்டர் நவீன் ராம்கூலம் தலைமையிலான தொழிலாளர் கட்சியான - பார்டி டிராவைலிஸ்ட்(பிடி'ஆர்') மற்றும் மொரீஷியன் ஆயுதப்படை இயக்கம்(எம்எம்எம்), நோவியாவ் ஜனநாயகத்தினர் கட்சிகளின் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியமைக்கிறது.

இந்நிலையில், மொரீஷியஸ் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள நவீன் ராம்கூலம்த்திற்கு பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். மொரீஷியஸ் நாட்டுடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் இருப்பதாக பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்