ரஷியாவில் 7.0 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

மீட்புப்பணிகளில் ஈடுபடும் வீரர்கள் பாதிப்புகளை ஆய்வுசெய்து வருகின்றனர்.

Update: 2024-08-18 01:13 GMT

மாஸ்கோ,

ரஷியாவின் கிழக்கு கம்சட்கா கடற்கரையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 7.0 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை பெட்ரோபாவ்லோவ்ஸ்க்-கம்சாட்ஸ்கிக்கு கிழக்கே சுமார் 90 கிலோமீட்டர் தொலைவிலும், 50 கிலோமீட்டர் (30 மைல்) ஆழத்திலும் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தை தொடர்ந்து அடுத்தடுத்து லேசான நில அதிர்வுகளும் பதிவாகியுள்ளது.

நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடினர். மீட்புப்பணிகளில் ஈடுபடும் வீரர்கள் பாதிப்புகளை ஆய்வுசெய்து வருகின்றனர். எனினும், நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல் ஏதும் வெளியாகவில்லை.

 

Tags:    

மேலும் செய்திகள்