ஆரத்தழுவிக்கொண்ட போப் பிரான்சிஸ்-பிரதமர் மோடி

சக்கர நாற்காலியில் வலம் வந்து, ஒவ்வொரு தலைவரையும் போப் பிரான்சிஸ் ஆசீர்வதித்தார்.

Update: 2024-06-14 18:34 GMT

ரோம்,

அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி, கனடா, ஜெர்மனி, ஜப்பான் ஆகிய நாடுகள் ஜி-7 நாடுகள் என்று அழைக்கப்படுகின்றன. அந்த அமைப்பின் தலைமை பொறுப்பு வகிக்கும் இத்தாலி, நடப்பு ஆண்டுக்கான ஜி-7 மாநாட்டை இத்தாலியில் அபுலியா பிராந்தியத்தில் உள்ள சொகுசு விடுதியில் நடத்தி வருகிறது.

ஜி-7 மாநாட்டில் போப் ஆண்டவர் பிரான்சிஸ் கலந்துகொண்டார். 87 வயதான அவர் சக்கர நாற்காலியில் அமர்ந்து இருந்தார். மாநாட்டை நடத்தும் இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனி வணக்கம் தெரிவித்தார்.

பின்னர், சக்கர நாற்காலியில் வலம் வந்து, ஒவ்வொரு தலைவரையும் போப் பிரான்சிஸ் ஆசீர்வதித்தார்.

அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், பிரான்ஸ் அதிபர் மெக்ரான் உள்ளிட்டோருடன் கைகுலுக்கினார். அவரும், பிரதமர் மோடியும் ஆரத்தழுவிக் கொண்டனர். பிரதமர் மோடி, போப்புடன் சிரித்தபடி உரையாடினார்.

மாநாட்டிலும் போப் பிரான்சிஸ் பேசினார். செயற்கை நுண்ணறிவு தொடர்பான அமர்வில் பேசிய அவர், ''செயற்கை நுண்ணறிவை நல்லமுறையில் பயன்படுத்துவது நம் ஒவ்வொருவர் கையிலும் உள்ளது'' என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்