'6 நாட்களுக்குள் தேர்தல் தேதி அறிவித்துவிடுங்கள்... இல்லையேல்...' - கெடுவிதித்த இம்ரான்கான்...!

பாகிஸ்தானில் அடுத்த 6 நாட்களுக்குள் பொதுத்தேர்தல் தேதி அறிவிக்கும்படி முன்னாள் பிரதமர் இம்ரான்கான் கெடுவிதித்துள்ளார்.

Update: 2022-05-26 11:08 GMT

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானின் நாடாளுமன்றத்தில் கடந்த மாதம் எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றிபெற்றதை தொடர்ந்து பிரதமர் இம்ரான்கான் தலைமையிலான அரசு கவிழ்ந்தது.

இதனை தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஷபாஸ் ஷெரீப் பாகிஸ்தானின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுக்கொண்டார்.

இதற்கிடையில், புதிய பிரதமராக ஷபாஸ் ஷெரீப் பொறுப்பேற்றுள்ளதை ஏற்க மறுத்து வரும் இம்ரான்கான் தனது ஆட்சி கவிழ்ப்பில் வெளிநாட்டு சதி இருப்பதாக கூறி வருகிறார். மேலும், பாகிஸ்தானின் புதிய அரசுக்கு எதிராக தனது கட்சியான பாகிஸ்தான் தெக்ரிக்-ஐ-இன்சஃப் கட்சியின் ஆதரவாளர்களை திரட்டி இம்ரான்கான் அவ்வப்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

அந்த வகையில், தலைநகர் இஸ்லாமாபாத் நோக்கி இம்ரான்கான் தனது ஆதரவாளர்களுடன் நேற்று பேரணியாக சென்றார். அந்த பேரணி இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

தலைநகர் இஸ்லாமாபாத்தில் இன்று பேரணியாக சென்ற தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய இம்ரான்கான், அரசாங்கள் நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு தேர்தல் தேதி அறிவிக்கும்வரை நான் இந்த இடத்திலேயே அமர்ந்து தர்ணாவில் ஈடுபட முடிவெடுத்தேன். ஆனால், கடந்த 24 மணிநேரத்தில் இந்த அரசாங்கம் நாட்டை அராஜக நிலைக்கு கொண்டு செல்கிறது. இந்த அரசாங்கள் நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு அடுத்த 6 நாட்களுக்குள் தேர்தல் தேதியை அறிவிக்கவேண்டும். இல்லையேல் தலைநகர் நோக்கி லட்சக்கணக்கான மக்களுடன் நான் மீண்டும் பேரணியாக வருவேன்' என்றார்.  

இதையும் படிக்க...  இம்ரான்கான் தலைமையில் பிரம்மாண்ட பேரணி; போராட்டக்காரர்கள் - போலீசார் இடையே மோதல்

Tags:    

மேலும் செய்திகள்