லண்டன் விமான நிலையத்திற்கு யுரேனியம் கலந்த சரக்கு அனுப்பப்பட்டதா? - பாகிஸ்தான் மறுப்பு

லண்டன் விமான நிலையத்திற்கு யுரேனியம் கலந்த சரக்கு அனுப்பப்பட்ட சம்பவத்திற்கு பாகிஸ்தான் மறுப்பு தெரிவித்துள்ளது.

Update: 2023-01-12 23:29 GMT

கோப்புப்படம்

இஸ்லாமாபாத்,

இங்கிலாந்தின் தலைநகரான லண்டனில் உள்ள ஹீத்ரோ விமான நிலையத்தில் டிசம்பர் 29-ம் தேதி ஓமன் பயணிகள் விமானத்தில் வந்த சரக்கு பெட்டகம் ஒன்றில் அணுமின் தாதுவான யுரோனியம் கலந்த கம்பிவடங்கள் இருந்தது கண்டறியப்பட்டது. அது பாகிஸ்தானின் கராச்சியில் இருந்து லண்டனில் இயங்கும் ஈரான் நிறுவனம் ஒன்றுக்கு அனுப்பப்பட்டதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.

இதையடுத்து பாதுகாப்பு அதிகாரிகள் அந்த பெட்டகத்தை கைப்பற்றினர். பயங்கரவாத எதிர்ப்பு பிரிவு போலீசாரின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது. இதுகுறித்து இங்கிலாந்து ஊடகங்களில் செய்தி வெளியானது. இதற்கு நேற்று பதிலளித்த பாகிஸ்தான் வெளியுறவு செய்தி தொடர்பாளர் மும்தாஜ் சக்ரா, "இதுகுறித்து எந்த தகவலும் இங்கிலாந்திடம் இருந்து அதிகாரப்பூர்வமாக எங்களிடம் பகிரப்படவில்லை. ஊடகங்களின் அந்த அறிக்கைகள் உண்மையல்ல" என்று மறுப்பு தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்