22 பேருடன் மாயமான நேபாள விமானம் விழுந்த இடம் கண்டுபிடிக்கப்பட்டது

நான்கு இந்தியர்கள் உட்பட 19 பயணிகளை ஏற்றிச் சென்ற நேபாள விமானம், இன்று காலை கட்டுப்பாட்டு அறையின் தகவல் தொடர்பை இழந்தது.

Update: 2022-05-29 10:43 GMT

காத்மாண்டு,

நேபாளத்தில் 22 பேருடன் மாயமான விமானம் விழுந்த இடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நேபாளத்தின் மஸ்டங் பகுதியில் உள்ள கோவாங் என்ற இடத்தில் விமானம் விழுந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விமானத்தில் பயணம் செய்தவர்களின் நிலை என்ன என்ன என்பது குறித்து எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

மாயமான நேபாள விமானம்

நான்கு இந்தியர்கள் உட்பட 19 பயணிகளை ஏற்றிச் சென்ற நேபாள விமானம், இன்று காலை கட்டுப்பாட்டு அறையின் தகவல் தொடர்பை இழந்ததாக விமான நிலைய அதிகாரிகள் உறுதிப்படுத்தி உள்ளனர். முன்னதாக தாரா ஏர் நிறுவனத்தின் 9 NAET இரட்டை எஞ்சின் விமானம், தலைநகர் காத்மாண்டுவில் இருந்து வடமேற்கே 200 கிமீ தொலைவில் உள்ள பொக்ராவிலிருந்து, வடமேற்கில் 80 கிமீ தொலைவில் உள்ள ஜோம்சோம் நகருக்கு காலை 9.55 மணியளவில் புறப்பட்டது. சிறிது நேரத்தில் விமானம் கட்டுபாட்டு அறை உடனான தொடர்பு துண்டிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விமானத்தை தேடும் பணி முழு வீச்சில் நடைபெற்ற நிலையில், தற்போது விமானம் விழுந்த இடம் தெரியவந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்