வங்காளதேசத்தில் கனமழை, வெள்ளம்: 15 பேர் பலி

வங்காளதேசத்தில் பெய்துவரும் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக 15 பேர் உயிரிழந்தனர்.

Update: 2024-08-23 14:46 GMT

டாக்கா,

வங்காளதேசம் மற்றும் இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் பருவமழை தீவிரமடைந்து வருகிறது. பருவமழை காரணமாக வங்காளதேசத்தின் பல்வேறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்து ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக, அந்நாட்டின் வடகிழக்கு மற்றும் தென்கிழக்கு பகுதிகளில் 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கனமழை, வெள்ளப்பெருக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால், 40 லட்சத்து 80 ஆயிரம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், வங்காளதேசத்தில் பெய்துவரும் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கில் இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். மீட்புப்பணிகள் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில் கனமழை மேலும் தீவிரமடையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்