சிகிச்சைக்கு பயந்து குரங்கு அம்மை தொற்றுடன் தாய்லாந்திலிருந்து கம்போடியாவுக்கு தப்பியோடிய நைஜீரிய நபர் பிடிபட்டார்!

நைஜீரியா நாட்டை சேர்ந்த ஒருவர் தாய்லாந்தில் வசித்து வந்தார். குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்ட அந்த நபர் கம்போடியாவிற்கு தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்பட்டது.

Update: 2022-07-25 10:29 GMT

கம்போடியா,

நைஜீரியா நாட்டை சேர்ந்த ஒருவர் தாய்லாந்தில் வசித்து வந்தார். குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்ட அந்த நபர் கடந்த சனிக்கிழமை அன்று கம்போடியாவிற்கு தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், கம்போடியாவின் புனோம் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட அவரை போலீசார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த தகவலை கம்போடிய சுகாதார அமைச்சகம் தெரிவித்தது.

27 வயதான அந்த நபர் தாய்லாந்து சென்று அங்கு வசித்து வந்தார். அவருடைய விசா காலம் முடிந்த பிறகும் தாய்லாந்திலேயே தங்கி இருக்கிறார். இந்நிலையில் அவருக்கு குரங்கு அம்மை நோய் ஏற்பட்டது.

தாய்லாந்தில் அவர் தங்கியிருந்த புக்கெட் பகுதியில் இருந்து அங்குள்ள இரண்டு கேளிக்கை விடுதிகளுக்கு அவர் சென்றுள்ளார். இதனால் அங்கு கிட்டத்தட்ட 142 பேரை கண்டறிந்து அவர்களுக்கும் வைரஸ் தொற்று ஏற்பட்டதா என பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் அந்த நபர், ஒரு பெண்ணுடன் உடலுறவு வைத்துக் கொண்டதாகவும் கூறியுள்ளார்.

இதனிடையே அந்த நபர் அப்பகுதியில் இருந்து தப்பி விட்டார். அவர் தனது மொபைல் போனையும் ஆப் பண்ணி விட்டார். தாய்லாந்து சுகாதாரத்துறை அதிகாரிகள் அவரை தொடர்பு கொள்ள முயற்சித்தும் பயன் இல்லை.

இதனை அடுத்து தாய்லாந்து முழுவதும் அவரைத் தேடும் பணி தீவிர படுத்தப்பட்டது. அப்போது அவரது செல்போன் எண் கம்போடியா நாட்டின் வடகிழக்கு மாகாணத்தில் ஆண் செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது.

தொடர்ந்து கம்போடிய காவல்துறை பல இடங்களில் தேடுதல் வேட்டை நடத்தியது. அப்போது விருந்தினர் மாளிகையில் அந்த நபர் இருப்பதை கண்டறிந்தனர். அதன் பின் அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்.

மேலும் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்ட அந்த நைஜீரிய நபருடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து அவர்களை தனிமைப்படுத்தும் பணியில் இறங்கி உள்ளனர். இதனை கம்போடிய சுகாதாரத்துறை தெரிவித்தது.

Tags:    

மேலும் செய்திகள்