கிழக்கு ஸ்பெயினில் கனமழை - வெள்ளத்தில் மிதக்கும் நகரங்கள்

வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் மக்களை காப்பாற்றும் பணிகளை மீட்புப் படையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.

Update: 2022-11-13 18:27 GMT

மேட்ரிட்,

கிழக்கு ஸ்பெயின் நாட்டில் கனமழையால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தெருக்கள், வீடுகள், வாகனங்கள் அனைத்தும் மழை நீரில் மூழ்கியுள்ளன. மோசமான வானிலை காரணமாக வாலன்சியா விமான நிலையத்தில் பல விமானங்கள் பல மணி நேரம் தாமதாக புறப்பட்டன.

அங்குள்ள அல்டாயா நகரில் உள்ள ஒரு பள்ளத்தாக்கில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அங்கு மறு அறிவிப்பு வரும் வரை ஓடுபாதையை மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பல பகுதிகளில் வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் மக்களை காப்பாற்றும் பணிகளை மீட்புப் படையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.

நடப்பு ஆண்டில் 2-வது முறையாக கிழக்கு ஸ்பெயினில் கனமழை பெய்து வருகிறது. இதற்கு முன்பு கடந்த மே மாதம் பெய்த மழையால் அங்கு கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்