பாகிஸ்தானில் கனமழை எதிரொலி; 3 குழந்தைகள் உள்பட 6 பேர் பலி

பாகிஸ்தானில் கடந்த ஜூலை 1 முதல் செப்டம்பர் 14 வரையில் கனமழை, நிலச்சரிவுகள் மற்றும் வெள்ளம் ஆகியவற்றில் சிக்கி 107 பேர் பலியாகி உள்ளனர்.

Update: 2024-09-14 22:29 GMT

கைபர் பக்துன்குவா,

பாகிஸ்தானில் கைபர் பக்துன்குவா மாகாணத்தில் கடந்த வெள்ளி கிழமை காலையில் கனமழை பெய்ய தொடங்கியது. தொடர்ந்து நேற்றும் கனமழை பெய்தது. இதில், சர்சடா மாவட்டத்தில் உள்ள வீடு ஒன்று இடிந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் சிக்கி ஒரே குடும்பத்தின் 5 பேர் உயிரிழந்தனர்.

அவர்களில் 3 பேர் குழந்தைகள் ஆவர். இதுதவிர, அப்பர் தீர் பகுதியில் இடி, மின்னல் தாக்கியதில் நபர் ஒருவர் பலியானார். இதனால், 2 நாட்களில் கனமழைக்கு பலியானோர் எண்ணிக்கை 6 ஆக உள்ளது.

அடுத்தடுத்த நாட்களிலும் கனமழை தொடர கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், கண்காணிப்புடன் இருக்கும்படி மாவட்ட நிர்வாகத்திடம் கேட்டு கொள்ளப்பட்டு உள்ளது.

இந்த மாகாணத்தில் கடந்த ஜூலை 1 முதல் செப்டம்பர் 14 வரையில் கனமழை, நிலச்சரிவுகள் மற்றும் வெள்ளம் ஆகியவற்றில் சிக்கி 107 பேர் பலியாகி உள்ளனர். 146 பேர் காயமடைந்தனர். 977 வீடுகள் சேதமடைந்து உள்ளன என அந்நாட்டின் ஊடகம் டான் வெளியிட்ட செய்தி தெரிவிக்கின்றது.

Tags:    

மேலும் செய்திகள்