நைஜீரியாவில் தேவாலயத்தில் துப்பாக்கிச் சூடு - பெண்கள், குழந்தைகள் உட்பட 50 பேர் பலி

மர்ம நபர்கள் துப்பாக்கிகளால் சுட்டும், வெடிகுண்டுகளை வெடித்தும் தாக்குதல் நடத்தினர்.

Update: 2022-06-06 04:41 GMT

கோப்புப்படம் 

ஓவோ,

நைஜீரியா நாட்டின் வடமேற்குப் பகுதி ஒண்டோ மாநிலத்தில் உள்ள ஓவோவில் செயின்ட் பிரான்சிஸ் கிறிஸ்தவ தேவாலயம் உள்ளது. இங்கு நேற்று பெந்தகோஸ்தே ஞாயிறு பிரார்த்தனை நடைபெற்றது. அதில் ஏராளமான ஆண்கள், பெண்கள், குழந்தைகள் பங்கேற்று வழிபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென தேவாலயத்துக்கு வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள், துப்பாக்கிகளால் சுட்டும், வெடிகுண்டுகளை வெடித்தும் தாக்குதல் நடத்தினர். இதில் பெண்கள் குழந்தைகள் உள்பட 50 பலர் பலியாகினர். மேலும் பலர் காயமடைந்தனர்.

அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். நைஜீரியாவின் பல பகுதிகளில் பயங்கரவாத பிரச்சினை உள்ளது. ஆனால் அந்நாட்டின் அமைதியான மாநிலங்களில் ஒன்றாக கருதப்படும் ஒண்டோவில் நடந்த இந்த கொடூர தாக்குதல், பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்