கின்னஸ் சாதனை படைத்த உலகின் மிக வயதான நாய் இறப்பு
கின்னஸ் சாதனை படைத்த உலகின் மிக வயதான நாய் பெப்பில்ஸ் இறந்துள்ளது.;
நியூயார்க்,
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கடந்த 2000-ம் ஆண்டு மார்ச் 28-ம் தேதி பிறந்த நாயை, பாபி மற்றும் ஜூலி கிரிகோரி என்ற தம்பதி பெப்பில்ஸ் என பெயரிட்டு வளர்க்கத் தொடங்கினர். உலகிலேயே மிக அதிக வயதுடைய நாயாக 21 வயதான டோபி கெய்த் என்ற நாய் அறிவிக்கப்பட்டபோது, பாபி - ஜூலி தம்பதி தங்களது நாய் அதை விட அதிக வயதுடையது என்பதால், கின்னஸ் சாதனைக்கு விண்ணப்பித்தனர்.
இதனைத் தொடர்ந்து, உலகிலேயே மிக அதிக வயதுடைய நாயாக பெப்பில்ஸ் அறிவிக்கப்பட்டது. தற்போது பெப்பில்ஸ்-க்கு 23 வயது ஆவதற்கு இன்னும் 5 மாதங்கள் உள்ள நிலையில் அது கடந்த 3ம் தேதி தனது 22 வயதில் உடல்நலக்குறைவால் இறந்துவிட்டதாக அதன் உரிமையாளர்கள் தெரிவித்து உள்ளனர்.
ராக்கி என்ற அதே இனத்தைச் சேர்ந்த நாயுடன் இணைந்து வாழ்ந்து வந்த பெப்பில்ஸ் தனது வாழ்நாளில் 32 குட்டிகளை பெற்றுள்ளது. 2017ம் ஆண்டு ராக்கி தனது 16 வயதில் இறந்த நிலையில் பெப்பில்ஸ் தனது 22-வது வயதில் இறந்துள்ளது.
பெப்பில்ஸ் கிராமிய இசையை விரும்பி ரசித்ததாகவும், தங்கள் குடும்பத்தில் மிக செல்லமாக வளர்ந்ததாகவும், அதன் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.