இலங்கையில் மீண்டும் எரிபொருள் விநியோகம் தொடக்கம்...!

இலங்கையில் மீண்டும் எரிபொருள் விநியோகம் தொடங்கப்பட்டுள்ளது.

Update: 2022-07-10 07:21 GMT

கொழும்பு,

இலங்கையில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக அரசின் சிலோன் பெட்ரோலிய கார்பரேஷனுக்கு சொந்தமான விற்பனை நிலையங்களில் கடந்த 27-ந்தேதி முதல் அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே எரிபொருள் விற்பனை நடந்து வருகிறது. அதேநேரம் இந்தியன் ஆயில் கார்பரேஷனின் (ஐ.ஓ.சி.) இலங்கை கிளையான லங்கா ஐ.ஓ.சி.யின் சில்லறை விற்பனை நிலையங்களில் மட்டுமே பெட்ரோல்-டீசல் விற்பனை நடந்து வந்தது.

இந்த நிலையில் நாட்டின் நெருக்கடிக்கு தீர்வு காண முடியாத இலங்கை அரசு பதவி விலகக்கோரி போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன. இதைத்தொடர்ந்து அரசின் கோரிக்கையை ஏற்று இலங்கையில் கடந்த வெள்ளிக்கிழமையில் இருந்து எரிபொருள் விநியோகதை லங்கா ஐ.ஓ.சி நிறுத்தியது.

இந்நிலையில், இலங்கையில் மீண்டும் எரிபொருள் விநியோகத்தை இன்று முதல் லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் தொடங்கியுள்ளது. திருகோணமலையில் இருந்து எரிபொருள் நிலையங்களுக்கான விநியோக பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் திருகோணமலையில் உள்ள லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்து சொந்தமான முனையம் 24 மணி நேரமும் இயங்கு என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்