ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 4.1 ஆக பதிவு

ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.

Update: 2023-11-20 22:54 GMT

 

காபுல்,

ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலை 3.14 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. தலைநகர் காபுலில் இருந்து 535 கிலோ மீட்டர் தொலைவில் 73 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

ரிக்டர் அளவில் 4.1 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த விவரம் இதுவரை வெளியாகவில்லை. ஆப்கானிஸ்தானில் கடந்த மாதம் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் 2 ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்