பாரசூட் திறக்க தாமதம்; 4 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து குதித்த டிக்டாக் பிரபலம் பலி

டிக்டாக் பிரபலமான இவர் அழகி போட்டியில் இறுதி சுற்றுக்குள் நுழைந்துள்ளார்.

Update: 2022-09-04 00:22 GMT

ஒட்டாவா,

கனடா நாட்டின் ஒடரியோ மாகாணம் டொரண்டோ பகுதியை சேர்ந்த இளம்பெண் தன்யா பர்டஷி (வயது 21). கல்லூரி மாணவியான இவர் 2017-ம் ஆண்டு நடந்த 'மிஸ் டீன் கனடா' அழகி போட்டியில் பங்கேற்று இறுதி சுற்று வரை சென்றுள்ளார்.

தன்யா பர்டஷி டிக்டாக்கில் மிகவும் பிரபலமானவர். அவரை 1 லட்சத்திற்கும் அதிகமானோர் டிக்டாக்கில் பின் தொடர்கின்றனர்.

இதனிடையே, தன்யா பர்டஷி வானில் இருந்து கிழே பாரசூட்டில் கீழே குதித்து சாகத்தில் ஈடுபடும் ஸ்கை டைவிங்கில் மிகவும் ஆர்வம் கொண்டவர். அவர், பல முறை 2 பேர் குதிக்கும் வகையில் உதவியாளருடன் வானில் இருந்து குதித்து ஸ்கை டைவிங் சாகம் செய்துள்ளார். பின்னர் பயிற்சி பெற்று தனியாக ஸ்கை டைவிங் செய்ய உரிமம் பெற்றார்.

இந்நிலையில், தன்யா பர்டஷி டொரண்டோவில் நேற்று தனியாக ஸ்கை டைவிங் செய்துள்ளார். விமானத்தில் இருந்து 4 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து தன்யா குதித்துள்ளார்.

ஆனால், அவர் தாமதமாக பாரசூட்டை திறந்துள்ளார். இதனால், பாரசூட் முழுமையாக திறந்து வேலை செய்வதற்குள் அவர் தரையில் வேகமாக விழுந்தார்.

இதையடுத்து, தன்யாவை மீட்ட மீட்புக்குழுவினர் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தன்யாவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்