நடுவானில் விமானத்தை துளைத்த துப்பாக்கி குண்டு...! ஜன்னல் ஓரம் அமர்ந்திருந்த வாலிபருக்கு ஏற்பட்ட சோகம் !

நடுவானில் பயணியின் காதில் துப்பாக்கி குண்டு பாய்ந்ததால் இது சக பயணிகளின் வேலையாக இருக்கும் என பயணிகள் அனைவரிடம் சோதனை நடத்தப்பட்டுள்ளது

Update: 2022-10-03 08:28 GMT

மியான்மர்

மியான்மர் அரசுக்கு சொந்தமான ஒரு விமானம் ஒன்று 63 பயணிகளுடன் சுமார் 3,500 அடி உயரத்தில் கிழக்கு கயா மாநிலத்தில் தலைநகரான லோய்கா விமான நிலையம் நோக்கி சென்றுகொண்டிருந்தது. அப்போது விமானநிலையம் நெருங்கியதால் விமானத்தின் பைலட் விமானத்தின் உயரத்தை குறைத்துக்கொண்டே வந்துள்ளார். அப்போது திடீரென விமானத்தில் இருந்த பயணியின் அலறல் சத்தம் கேட்டுள்ளது. உடனே விமான ஊழியர்கள் அவரை பரிசோதித்தபோது அவரின் காதில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது தெரியவந்தது.

நடுவானில் பயணியின் காதில் துப்பாக்கி குண்டு பாய்ந்ததால் இது சக பயணிகளின் வேலையாக இருக்கும் என பயணிகள் அனைவரிடம் சோதனை நடத்தப்பட்டுள்ளது. ஆனால், அவர்கள் யாரிடமும் துப்பாக்கி இல்லாததால் விமானத்தை சோதித்தபோது தரையில் இருந்து சுடப்பட்ட துப்பாக்கி குண்டு விமானத்தை துளைத்து பயணியை தாக்கியது தெரியவந்தது. பின்னர் விமானம் தரையிரங்கியதும் அந்த பயணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இது குறித்து ராணுவ அரசின் செய்தித் தொடர்பாளர் மேஜர் ஜெனரல் ஜாவ் மின் துன்

அரசுக்கு எதிராகப் போராடும் பயங்கரவாதிகள் தான் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தி உள்ளனர் என கூறினார்.

ஆனால் அரசின் இந்த குற்றச்சாட்டை கிளர்ச்சி படை மறுத்துள்ளது. இந்த தாக்குதலைத் தொடர்ந்து லோகாவ் நகருக்கு செல்லும் அனைத்து விமானங்களும் காலவரையின்றி ரத்து செய்யப்படுவதாக மியான்மர் ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்