அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி உக்ரைன் பயணம் - கூடுதல் ராணுவ உதவி வழங்க திட்டம்

உக்ரைனுக்கு கூடுதலாக ராணுவ உதவி வழங்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.

Update: 2023-09-06 09:28 GMT

கீவ்,

உக்ரைன் - ரஷியா இடையேயான போர் இன்று 560 வது நாளாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரில் உக்ரைனுக்கு ஆயுத உதவிகளை அமெரிக்கா உள்பட மேற்கத்திய நாடுகள் வழங்கி வருகின்றன. அமைதி பேச்சுவார்த்தைக்கு இரு நாடுகளும் உடன்படாத நிலையில் போர் தொடர்ந்து நீடித்து வருகிறது.

இந்நிலையில், அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஆண்டனி பிளிங்கன் திடீர் பயணமாக இன்று உக்ரைன் சென்றுள்ளார். அவர் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்திக்க உள்ளார். இந்த பயணத்தின் போது உக்ரைனுக்கு கூடுதலாக சுமார் 200 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிலான ராணுவ உதவியை பிளிங்கன் அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்