முறைகேடு வழக்கில் தண்டனை; சம்சங் நிறுவன துணைத்தலைவருக்கு பொது மன்னிப்பு அளித்தது தென்கொரியா

முறைகேடு வழக்கில் சிறைதண்டனை விதிக்கப்பட்ட சம்சங் நிறுவன துணைத்தலைவருக்கு தென்கொரியா பொது மன்னிப்பு அளித்துள்ளது.

Update: 2022-08-12 11:35 GMT

சியோல்,

கடந்த 2017ம் ஆண்டு தென்கொரிய முன்னாள் அதிபர் பார்க் கியூன் ஹேக்கு லஞ்சம் கொடுத்த புகாரில் சம்ஸங் துணைத் தலைவரான லீ ஜே-யோங் (54) கைது செய்யப்பட்டார். சியோல் உயர்நீதிமன்றம், அவருக்கு 30 மாதங்கள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது.

இதனை தொடர்ந்து 18 மாதங்கள் சிறையில் இருந்த அவர், கடந்தாண்டு பரோலில் விடுதலை செய்யப்பட்டார். 5 ஆண்டுகள் பணிபுரியக் கூடாது, வெளிநாடு செல்லக் கட்டுப்பாடுகளுடன் பரோலில் விடுவிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், தற்போதுலீ ஜே-யோங்-கிற்கு பொது மன்னிப்பு வழங்கி தென்கொரிய அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

தொழிலதிபர்களுக்கு சிறப்பு பொது மன்னிப்பு, நாட்டின் வளர்ச்சியில் அவர்களின் பங்களிப்பை கருத்தில் கொண்டு வழங்கப்படுகிறது. இந்த உத்தரவால், தொழில்நுட்ப முதலீடு மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கம் அதிகரிக்கும். இது நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடியை சமாளிக்க முடியும் என்று தென்கொரிய அதிபர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்