சீனாவில் நிலநடுக்கம் - ரிக்டர் 7.2 அளவாக பதிவு

நிலநடுக்கத்தின் மையம் தரைமட்டத்தில் இருந்து 80 கி.மீ. ஆழத்தில் அமைந்திருந்ததாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Update: 2024-01-23 03:00 GMT

பீஜிங்,

சீனாவின் தெற்கு சின்ஜியாங் மாகாணத்தில், நேற்று இரவு 11.39 மணிக்கு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.2 அளவில் பதிவாகி உள்ளதாக சீனாவின் தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தின் மையம் தரைமட்டத்தில் இருந்து 80 கி.மீ. ஆழத்தில் அமைந்திருந்ததாக புவியியல் ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே சீனாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கத்தால் டெல்லி உள்ளிட்ட இந்தியாவின் பிற பகுதிகளிலும் நில அதிர்வு உணரப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  

Tags:    

மேலும் செய்திகள்