நேபாள ஆற்றில் மாயமான இந்திய சுற்றுலாப்பயணிகள் பத்திரமாக மீட்பு

உத்தர பிரதேச மாநிலம் கோரக்பூர் மாவட்டத்தில் இருந்து சுற்றுலாப்பயணிகள் நேபாளம் சென்றனர்.

Update: 2022-06-17 11:46 GMT

காத்மாண்டு,

இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்று நேபாளம். இமயமலை அடிவாரத்தில் இயற்கை எழில் கொஞ்சும் பகுதியில் அமைந்துள்ள நேபாளத்திற்கு இந்திய சுற்றுலாப்பயணிகள் அதிக அளவில் சென்று வருவது வழக்கம்.

அந்த வகையில், உத்தர பிரதேச மாநிலம் கோரக்பூர் மாவட்டத்தில் இருந்து சுற்றுலாப்பயணிகள் நேபாளம் சென்றனர். அவர்கள் நேபாளத்தின் பல்பா மாவட்டத்தில் உள்ள கலிகண்டகி ஆற்றில் சிறிய ரக படகு ஒன்றில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, படகு கவிழ்ந்ததில் 7 பேரும் நீரில் மூழ்கி மாயமாகினர். உடனடியாக உள்ளூர் வாசிகளுடன் இணைந்து மீட்பு பணியில் நேபாள மீட்புக்குழுவினர் ஈடுபட்டனர். 45 நிமிட தேடுதல் வேட்டைக்குப் பிறகு மாயமான 7 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். இந்த தகவலை நேபாள நாளிதழ் வெளியிட்டுள்ளது.

பருவமழைக்காலம் தொடங்கியிருப்பதால், கலகண்டகி ஆற்றில் நீர் வரத்து அதிகரித்து உள்ளது. இதனால், இந்த ஆற்றில் படகு சவாரி செய்வதை சுற்றுலாப்பயணிகள் தவிர்க்க வேண்டும் என்று நேபாள அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்