உக்ரைனுக்கு புதிதாக 2,400 கோடி மதிப்பிலான ஆயுதங்கள் வழங்கப்படும்- அமெரிக்கா அறிவிப்பு

உக்ரைனுக்கு அமெரிக்கா புதிய ஆயுத உதவிகளை வழங்குவதாக அறிவித்து உள்ளது.

Update: 2023-05-04 16:20 GMT

வாஷிங்டன்,

உக்ரைன் - ரஷியா இடையிலான போர் ஒரு வருடங்களை கடந்து தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சிறிய நாடான உக்ரைன், பல்வேறு நாடுகளின் உதவி மற்றும் அமெரிக்காவின் ராணுவ உதவியுடனும் தொடர்ந்து சண்டை செய்து வருகிறது.

இந்த நிலையில், அமெரிக்கா உக்ரைனுக்கு புதிதாக சுமார் 2 ஆயிரத்து 400 கோடி ரூபாய் மதிப்பிலான ராணுவ உதவிகளை அறிவித்துள்ளது. ராக்கெட் லாஞ்சர்கள், கூடுதல் ஹோவிட்சர்கள், பீரங்கிக்காக வெடிமருந்துகள் ஆகியவையும் இத்தொகுப்பில் அடக்கம்.

ரஷ்யா உக்ரைன் மீது படையெடுக்கத் துவங்கியதில் இருந்து இதுவரை அமெரிக்கா 2 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான பாதுகாப்பு உதவிகளை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Tags:    

மேலும் செய்திகள்