மியான்மரில் ராணுவப் புரட்சி: எந்த பயமும் இன்றி நாடாளுமன்றம் முன் நடனமாடிய பெண்

மியான்மரில், ராணுவப் புரட்சி நடைபெற்று கொண்டிருப்பது குறித்து எதுவும் தெரியாமல், நாடாளுமன்றம் முன் நடனமாடி வரும் பெண்ணின் கானொளி இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.;

Update:2021-02-02 22:00 IST
நைபிடா 

மியான்மரில் நடைபெற்ற 2-வது பொதுத்தேர்தலில் ஆங் சான் சூகி கட்சி அமோக வெற்றி பெற்றது. ஆனால், ராணுவம் இந்த தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாக குற்றம்சாட்டியது. இந்த சூழலில், மியான்மர் அரசு ஆலோசர் ஆங் சான் சூகி, அதிபர் உள்ளிட்டோரை ராணுவம் சிறைபிடித்தது. மேலும் ஓராண்டுக்கு அவசர நிலை பிறப்பிக்கப்படுவதாக அந்நாட்டு ராணுவம் அறிவித்துள்ளது.

மீண்டும் ராணுவ புரட்சி ஏற்படுமோ என்ற பதற்றமான நிலை ஏற்பட்டுள்ள சமயத்தில், கிங் ஹின் வாய் என்ற பெண் அந்நாட்டு நாடாளுமன்ற  கட்டிடம் முன் நடனம் ஆடி, அதனை வீடியோவாக பதிவிட்டுள்ளார்.

மியான்மரில், ஆட்சியை கைப்பற்றிய ராணுவத்தினர் நாடாளுமன்றத்தை நோக்கி சைரன் வாகனங்களில் அணிவகுத்துச் சென்றனர். இது குறித்து எதுவும் அறியாத கிங் ஹின் வை என்ற நடனக்கலைஞர், தனக்கு பின்னால் செல்லும் ராணுவ வாகனங்களை பொருட்படுத்தாமல் நடனப் பயிற்சியில் மூழ்கியிருந்தார்.

இணையத்தில் வைரல் ஆன இந்த காணொளியை 1 கோடியே 30 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் கண்டு களித்தனர்.

இதுகுறித்து  கிங் ஹின் வாய்  கூறியதாவது:-

பிட்னஸ் போட்டி ஒன்றிற்காக இந்த வீடியோவை எடுத்தேன். நான் காலை செய்திகளை பார்க்கவில்லை. பிறகு தான் அவசரநிலை அமல்படுத்தப்பட்டுள்ள தகவல் தெரியும் என்றார். மியான்மர் கல்வி அமைச்சக ஊழியரான இவர், இதே இடத்தில் நடனமாடி பல வீடியோக்களை வெளியிட்டுள்ளார்.


மேலும் செய்திகள்