தென்கொரியா - வடகொரியா அடுத்தடுத்து துப்பாக்கிச்சூடு ; கொரிய தீபகற்பத்தில் பதற்றம்

தென்கொரியா மற்றும் வடகொரியா அடுத்தடுத்து கொரிய தீபகற்பத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

Update: 2022-10-24 07:06 GMT

Image Courtesy: AFP

சியோல்,

அணு ஆயுதங்களை தாக்கிச்செல்லும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை சோதனை செய்து உலக நாடுகளுக்கு அவ்வப்போது அதிர்ச்சி கொடுத்து வரும் நாடு வடகொரியா. குறிப்பாக, தன் எதிரி நாடுகளாக கருதும் தென் கொரியா மற்றும் அமெரிக்காவை சீண்டும் வகையில் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது.

குறிப்பாக, கடந்த சில நாட்களாக அடுத்தடுத்து ஏவுகணை சோதனை நடத்தி கொரிய தீபகற்பத்தில் வடகொரியா போர் பதற்றத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில், தென்கொரியாவும் வடகொரியாவும் இன்று அடுத்தடுத்து துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தங்கள் நாட்டின் கடற்பரபிற்குள் வடகொரியாவின் வர்த்தக கப்பல் இன்று அதிகாலை 4 மணயளவில் நுழைந்ததாகவும் அதை எச்சரிக்கும் வகையில் கடற்படை வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாகவும் தென்கொரியா தெரிவித்தது.

இதற்கு பதிலடியாக வடகொரியாவும் 10 முறை வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தி தென்கொரியாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இரு நாட்டு கடற்படையும் மாறி மாறி துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் கொரிய தீபகற்பத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்