பாகிஸ்தான்: பயங்கரவாதிகள், பாதுகாப்புப்படையினர் இடையே மோதல்: 35 பேர் பலி

பாகிஸ்தானில் பயங்கரவாதிகள், பாதுகாப்புப்படையினர் இடையே நடந்த மோதலில் 35 பேர் உயிரிழந்தனர்.

Update: 2024-08-26 23:40 GMT

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தின் முசாகெல் மாவட்டத்தில் நேற்று பயங்கரவாத தாக்குதல் நடைபெற்றது. முசாகெல் மாவட்டத்தில் ரரஷம் என்ற பகுதியில் சென்றுகொண்டிருந்த பஸ்சில் பயணித்த பயணிகள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். பஸ்சை இடைமறித்த பயங்கரவாதிகள் அதில் பயணம் செய்த பஞ்சாப் மாகாணத்தை சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 23 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பலூசிஸ்தான் விடுதலை ராணுவம் என்ற கிளர்ச்சிக்குழு பொறுப்பேற்றது.

இந்த பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பலூசிஸ்தான் மாகாணத்தில் பாதுகாப்புப்படையினர் அதிரடி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, பாதுகாப்புப்படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை ஏற்பட்டது. இந்த துப்பாக்கிச்சண்டை மோதலில் பயங்கரவாதிகள் 21 பேர் , பாதுகாப்புப்படையினர் 14 பேர் என மொத்தம் 35 பேர் உயிரிழந்தனர்.

பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கை தொடர்ந்து நடைபெறும் என பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்