வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில் வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தஞ்சை கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.;

Update:2022-09-22 02:07 IST


சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில் வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தஞ்சை கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு

தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள பெருமாக்காநல்லூர் பகுதியை சேர்ந்தவர் வீரையன். இவருடைய மகன் அருண்குமார் (வயது23). கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் 9-ந் தேதி எல்.கே.ஜி. படித்து வந்த 5 வயது சிறுமி, தெருவில் விளையாடி கொண்டிருந்தார்.அம்மா இல்லாத இந்த சிறுமி பாட்டியின் வளர்ப்பில் வளர்ந்து வந்தார். அந்த சிறுமி விளையாடி கொண்டிருந்தபோது, அந்த சிறுமியை அருண்குமார் தனது வீட்டிற்கு தூக்கி சென்று பாலியல் தொந்தரவு செய்தார். இதனால் செய்வது அறியாமல் தவித்த அந்த சிறுமி கதறி அழுதார்.

20 ஆண்டுகள் சிறை

பின்னர் அழுது கொண்டே வீட்டிற்கு வந்த சிறுமியிடம் என்ன விவரம் என? பாட்டி கேட்டபோது, தனக்கு நடந்த சம்பவத்தை கூறினார். இதனால் அதிர்ச்சி அடைந்த பாட்டி மற்றும் உறவினர்கள் இது குறித்து பாபநாசம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் அப்போதைய போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி வழக்குப்பதிவு செய்து போக்சோ சட்டத்தின் கீழ் அருண்குமாரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கு தஞ்சை போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை நீதிபதி சவுந்தராஜன் விசாரணை செய்து அருண்குமாருக்கு 20 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார். மேலும் அவர், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கவும் அரசுக்கு பரிந்துரை செய்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் சசிரேகா ஆஜராகி வாதாடினார்.

Tags:    

மேலும் செய்திகள்