மானுடம் தழைக்க குறள் நெறி காட்டும் பாதையில் நடைபோடுவோம்: உதயநிதி ஸ்டாலின்
மானுடம் தழைக்க குறள் நெறி காட்டும் பாதையில் நடைபோடுவோம் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.;
சென்னை,
ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் இரண்டாவது நாள், மாட்டுப் பொங்கல் திருநாளன்று, திருவள்ளுவர் தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை, மெரினா கடற்கரையில் உள்ள திருவள்ளுவர் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து, அவரது திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சாமிநாதன், மற்றும் சென்னை மேயர் பிரியா ஆகியோரும் திருவள்ளுவர் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
இந்த நிலையில் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு சென்னை காமராஜர் சாலையில் உள்ள அய்யன் வள்ளுவரின் திருவுருவச்சிலைக்கு அருகே வைக்கப்பட்டிருந்த திருவுருவப்படத்துக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் இணைந்து இன்று காலை மரியாதை செலுத்தினோம். உலகத்தில் வாழும் அனைத்து மனிதர்களுக்குமான பொதுமறை தந்த அய்யன் திருவள்ளுவர் பெரும்புகழ் ஓங்கட்டும். மானுடம் தழைக்க குறள் நெறி காட்டும் பாதையில் நடைபோடுவோம்" என்று தெரிவித்துள்ளார்.