பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி: 19 பேர் காயம்

வாடிவாசலில் இருந்து சீறி வரும் காளைகளை வீரர்கள் மடக்கி பிடித்து வருகின்றனர்.;

Update:2025-01-15 13:14 IST

மதுரை,

பொங்கல் பண்டிகை என்றால் ஜல்லிக்கட்டு போட்டியும் நமது நினைவுக்கு வருவது வழக்கம். அதிலும் குறிப்பாக மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையையெட்டி முதல் ஜல்லிக்கட்டு போட்டி மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் நேற்று விறுவிறுப்பாக நடந்தது. இந்த நிலையில் மாட்டு பொங்கலையொட்டி பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் சங்கீதா ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

மகாலிங்க சாமி மடத்து கமிட்டி கோவில் காளை முதலில் அவிழ்த்து விடப்பட்டது. அதனை தொடர்ந்து வாடிவாசலில் இருந்து சீறி வரும் காளைகளை போட்டி போட்டு கொண்டு வீரர்கள் மடக்கி பிடித்து வருகின்றனர். போட்டியில் சிறந்து விளங்கும் காளை மற்றும் மாடு பிடி வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் இதுவரை 4 சுற்றுகள் நிறைவடைந்துள்ளன. நடந்து முடிந்த நான்கு சுற்றுகளில் மாட்டின் உரிமையாளர்கள் 4 பேர், பார்வையாளர்கள் (சிறுமி உட்பட) 6 பேர் என மொத்தமாக 19 பேர் காயமடைந்துள்ளனர். மேலும் ஒருவர் மேல்சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். நான்காவது சுற்று முடிவில் 5 பேர் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர். தற்போது 5-வது சுற்று நடைபெற்று வருகிறது

இறுதி சுற்றுக்கு தகுதியான வீரர்கள்:

அடைக்கன் அழகு

மனோஜ்

சூர்யா

நாட்டு அழகன்

செல்வகண்ணன்

Tags:    

மேலும் செய்திகள்