மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்ற வாலிபருக்கு அபராதம்

நெல்லையில் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்ற வாலிபருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

Update: 2023-02-08 20:11 GMT

நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவின் பேரில் மாநகர பகுதியில் போக்குவரத்து பிரிவு, குற்றப்பிரிவு போலீசார் மற்றும் சட்டம்- ஒழுங்கு பிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஹெல்மெட் அணியாமல், வாகனங்களுக்கு உரிய ஆவணங்கள் மற்றும் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் மற்றும் போக்குவரத்து விதிமுறைகளை மீறி வாகனங்கள் ஒட்டி வந்த 137 பேருக்கு போலீசார் உடனடியாக அபராதம் விதித்தனர்.

இதேபோல் நேற்று மாலையில் நெல்லை வண்ணார்பேட்டை பகுதியில் மோட்டார் சைக்கிளில் அதிவேகமாக பைக் ரேஸ் சென்ற ஒரு வாலிபரை போலீசார் பிடித்து ரூ.2௦ஆயிரம் அபராதம் விதித்து அவருக்கு அறிவுரை கூறினர். அவர் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து போலீசார் அவரை தனியாக அழைத்து சென்று அபராதம் விதித்து விதிமுறைகளை எடுத்துக் கூறி அனுப்பி வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்