வந்தே பாரத் ரெயில் மீது கல்வீசிய வாலிபர் கைது

வந்தே பாரத் ரெயில் மீது கல்வீசிய வாலிபர் கைது செய்யப்பட்டார். அவருக்கு ஒருநாள் முழுவதும் கோர்ட்டில் இருக்கும்படி தண்டனை விதிக்கப்பட்டது.

Update: 2023-03-29 17:49 GMT

சென்னை ரெயில் நிலையத்திலிருந்து கர்நாடக மாநிலம் மைசூரு வரை செல்லும் வந்தே பாரத் ெரயில் நேற்று முன்தினம் சென்னையில் இருந்து மைசூருவுக்கு சென்றது. வாணியம்பாடி ரெயில் நிலையம் அருகே உள்ள புதூர் ரெயில்வே பாலம் பகுதியை கடக்கும்போது வாணியம்பாடி புதூர் அடுத்த திருமாஞ்சோலை புதுமனை பகுதியை சேர்ந்த மகேந்திரன் என்பவரின் மகன் குபேந்திரன் (வயது 22) என்பவர் ரெயில் மீது கல் வீசியதில் ரெயில் பெட்டியின் கண்ணாடி உடைந்தது.

இது குறித்து ரெயில் என்ஜின் டிரைவர் கொடுத்த புகாரின் பேரில் ஜோலார்பேட்டை ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் மணிமாறன் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் குமரேசன் உள்ளிட்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து குபேந்திரனை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் வாணியம்பாடி போலீஸ் நிலையத்தில், குபேந்திரன் மீது மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்கு இருப்பது தெரிய வந்தது. அவரை நேற்று காலை திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தினர். அவருக்கு காலை முதல் மாலை வரை ஒரு நாள் முழுவதும் கோர்ட்டில் அமர வைத்து தண்டனை வழங்கப்பட்டது. மேலும் ரூ.2 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்