2 கோவில்களில் பூட்டை உடைத்து திருடிய வாலிபர் கைது

நெல்லை அருகே 2 கோவில்களில் பூட்டை உடைத்து திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-09-22 18:58 GMT

நெல்லை அருகே 2 கோவில்களில் பூட்டை உடைத்து திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

பூஜை பொருட்கள்

நெல்லையை அடுத்த கங்கைகொண்டான் அருகே உள்ள பருத்திகுளம் காலனி தெருவை சேர்ந்தவர் வேலு (வயது 77). இவர் அந்த பகுதியில் உள்ள சுடலை கோவிலில் பூசாரியாக இருந்து வருகிறார்.

கடந்த 17-ந் தேதி கோவிலில் பூஜை முடிந்த பின்னர் கோவில் கதவை பூட்டிவிட்டு வீடுதிரும்பினார். அதன்பின்னர் நேற்று முன்தினம் வேலு கோவிலை திறக்க வந்த போது பூட்டு உடைக்கப்பட்டு கோவில் கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது அங்கு குத்துவிளக்கு, பானைகள், விபூதி கொப்பரைகள் உள்ளிட்ட பூஜை பொருட்களை மர்மநபர் திருடி சென்றது தெரியவந்தது.

அதே போல் கங்கைகொண்டான் அருகே கரிசல்குளத்தில் உள்ள அம்மன் கோவில் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர் அங்கு இருந்த 6 குத்து விளக்குகள், தாம்பூலம் தட்டுகள், பன்னீர் தெளிப்பான் உள்ளிட்ட பூஜை பொருட்களை திருடி சென்றுள்ளார்.

வாலிபர் கைது

இதுகுறித்து தகவல் அறிந்த கங்கைகொண்டான் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபரை தேடி வந்தனர். இந்த நிலையில் கங்கைகொண்டான் அருகே உள்ள வெங்கடாசலபுரத்தை சேர்ந்த சந்தனமாரிமுத்து (29) என்பவர் கோவில்களில் பூட்டை உடைத்து திருடியது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்