உளுந்தூர்பேட்டை சாலை விபத்தில் 6 பேர் உயிரிழப்பு: டாக்டர் ராமதாஸ் இரங்கல்

அதிகாலை பயணத்தை தவிர்க்க வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் அறிவுறுத்தி உள்ளார்.

Update: 2024-09-25 07:01 GMT

சென்னை,

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறியிருப்பதாவது:-

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே சாலையோர மரத்தில் வேன் மோதியதில் 2 பெண்கள் உள்பட 6 பேர் உயிரிழந்தனர்; 14 பேர் படுகாயமடைந்தனர் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும்  தெரிவித்துக்கொள்கிறேன். விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள காயமடைந்தவர்களுக்கு உயரிய மருத்துவம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதிகாலை நேரத்தில் ஓட்டுனருக்கு ஏற்பட்ட உறக்கம்தான் விபத்துக்கு காரணம் என்று கூறப்படுகிறது. அதிகாலை பயணம் மிகவும் ஆபத்தானது என்பதால் பொதுமக்கள் கார், வேன் போன்றவற்றில் இரவு 12 மணிக்கு மேல் பயணிப்பதை தவிர்க்க வேண்டும். தவிர்க்க முடியாத தருணங்களில் ரெயில், பேருந்து ஆகியவற்றில் பயணிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்