கபிஸ்தலம் அருகே உள்ள குடிகாடு நடுத்தெருவில் வசிப்பவர் முருகராஜ்(வயது52). விவசாயி. இவரது மகள் பவ்யா(24). பட்டதாரியான இவர் நீண்டநாட்களாக வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்தார். இதனால் மனமுடைந்த பவ்யா வீட்டில் யாரும் இல்லாதபோது வயலுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சிமருந்தை(விஷம்) கடந்த 19-ந்தேதி குடித்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த பவ்யாவை வீட்டில் இருந்தவர்கள் உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து முருகராஜ் கொடுத்த புகாரின் பேரில் கபிஸ்தலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.