தேர்தலை மனதில் கொண்டு யாத்திரை நடத்தவில்லை - ராகுல்காந்தி
இந்திய மக்களின் ஒற்றுமைக்காகவே நடைபயணம் செல்வதாக ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
நாகர்கோவில்,
இந்திய மக்களின் ஒற்றுமைக்காகவே நடைபயணம் செல்வதாகவும் தேர்தலை மனதில் வைத்துக் கொண்டு யாத்திரையை நடத்தவில்லை என்றும் ராகுல்காந்தி விளக்கமளித்துள்ளார்.
நாகர்கோவிலில் இருந்து 3-வது நாள் நடைபயணத்தை தொடங்கிய ராகுல்காந்தி புலியூர்குறிச்சி பகுதியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். பாஜக மக்களை பிரித்து வைத்திருக்கிறது என்றும் மக்களை இணைப்பதே தனது நடைபயணத்தின் நோக்கம் என்றும் ராகுல்காந்தி தெரிவித்தார்.
நாட்டின் அனைத்து நிறுவனங்களையும் பாஜக தன்வயப்படுத்தி வைத்துள்ளதாக குற்றஞ்சாட்டிய ராகுல்காந்தி, சிபிஐ, வருமானவரித்துறை போன்ற அமைப்புகளை வைத்து எதிர்க்கட்சிகளுக்கு நெருக்கடி கொடுப்பதாக விமர்சித்தார். அகில இந்திய காங்கிரஸ் தலைவர் யார் என்பது தேர்தலின்பிறகே தெரியவரும் என்று தெரிவித்தார்.