2-ம் நிலை காவலர் எழுத்து தேர்வு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2 மையங்களில் 2-ம் நிலை காவலர்களுக்கான எழுத்து தேர்வை 4,963 பேர் தேர்வு எழுதினர்.

Update: 2022-11-26 18:45 GMT

ஓசூர்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2 மையங்களில் 2-ம் நிலை காவலர்களுக்கான எழுத்து தேர்வை 4,963 பேர் தேர்வு எழுதினர்.

எழுத்து தேர்வு

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் 2-ம் நிலை காவலர்களுக்கான எழுத்து தேர்வு நேற்று நடந்தது. அதன்படி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆண் பெண், போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர், சிறை காப்பாளர் பணிகளுக்கான எழுத்து தேர்வு 2 மையங்களில் நடந்தது. தேர்வு காலை 1 மணி முதல் மதியம் 12.40 மணி வரை நடந்தது.

தேர்வு மையத்திற்கு காலை 8 மணிக்கு முன்பாகவே தேர்வர்கள் வந்தனர். அவர்களை தீவிர சோதனைக்கு பிறகு தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். ஓசூர் அதியமான் கல்லூரியில் நடந்த எழுத்து தேர்வில், 5,587 ஆண்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. இதில், 4,291 பேர் தேர்வு எழுதினார்கள். 1,296 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை.

டி.ஐ.ஜி. ஆய்வு

இதேபோல், சூளகிரி அருகே கோனேரிப்பள்ளியில் உள்ள பி.எம்.சி. டெக் என்ஜினீயரிங் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரியில் நடந்த எழுத்து தேர்வில், 896 பெண்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. அதில், 672 பேர் தேர்வு எழுதினார்கள். 224 பேர் தேர்வை எழுதவில்லை.

மேலும், தேர்வு மையங்களை, சேலம் சரக டி.ஐ.ஜி. பிரவீன்குமார் அபினபு, போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் ஆகியோர் பார்வையிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்