உலக கழிவறை தின நடைபயணம்
வள்ளாலகரம் ஊராட்சியில் உலக கழிவறை தின நடைபயணம் நடந்தது.
மயிலாடுதுறை ஒன்றியம் வள்ளாலகரம் ஊராட்சியில் உலக கழிவறை தினத்தை முன்னிட்டு மக்கள் விழிப்புணர்வு தூய்மை நடைபயணம் நடந்தது. இதற்கு ஊராட்சி மன்ற தலைவி ஜெயசுதா ராபர்ட் தலைமை தாங்கினார். வட்டார ஒருங்கிணைப்பாளர் அலெக்ஸ்ராஜ், கிராம நிர்வாக அலுவலர் கவுசல்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலாளர் சரவணன் வரவேற்றார். இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) மீனா கலந்து கொண்டு நடைபயணத்தை தொடங்கி வைத்தார். இதில் தூய்மை பணியாளர்கள், பொதுமக்கள், சிறுவர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு தொடங்கிய இந்த நடைபயணம் பல்வேறு வீதிகள் வழியாக சென்று மீண்டும் அதே இடத்தை வந்தடைந்தது.