சிவகாசியில் நடுரோட்டில் தொழிலாளி வெட்டிக்கொலை

சிவகாசியில் நடுரோட்டில் தொழிலாளி வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

Update: 2023-04-03 19:11 GMT

சிவகாசி, 

விருதுநகர் மாவட்டம் சிவகாசி முத்துராமலிங்கபுரம் பகுதியை சேர்ந்தவர் சுந்தரபாண்டி (வயது 36). சுமைதூக்கும் தொழிலாளி. இவர் நேற்று மாலை பழைய விருதுநகர் ரோட்டில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 4 பேர் கொண்ட கும்பல் சுமை தூக்கும் தொழிலாளி சுந்தரபாண்டியை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்று விட்டனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சுந்தரபாண்டியை அப்பகுதியை சேர்ந்த சிலர் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுந்தரபாண்டி இறந்தார். இதுகுறித்து சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்