போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பெண் தர்ணா

போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பெண் தர்ணா

Update: 2023-04-26 18:45 GMT


ராமநாதபுரம் மாவட்ட காவல் அலுவலகத்தில் வாரந்தோறும் புதன்கிழமை பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று காலை ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் பகுதியை சேர்ந்த நாகராஜ் மனைவி கவிதா (வயது24) என்பவர் தனது மகனுடன் வந்தார். அவர் கையில் பெட்ரோல் கேனுடன் வந்து தனது காதல் கணவரை தன்னுடன் சேர்த்து வைக்குமாறும் இல்லாவிட்டால் தற்கொலை செய்து கொள்ளப்போவதாகவும் கூறி தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதைதொடர்ந்து போலீசார் அவரை மீட்டு போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரையிடம் அழைத்து சென்றனர். அவர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

எனது கணவர் நாகராஜை கடந்த 2015-ம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டு கோவையில் வசித்து வந்தேன். 4 வயதில் மகன் உள்ளார். எங்களை பார்க்க வந்த கணவரின் குடும்பத்தினர் என்னுடன் வாழக்கூடாது என்று கூறிவிட்டு சென்றுவிட்டனர். இதன்பின்னர் எனது கணவர் என்னிடம் பிரிந்து பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதுகுறித்து அங்கு சென்று நான் கேட்டபோது மிரட்டினர். இதுகுறித்து போலீசில் புகார் கொடுத்தும் நடவடிக்கையும் இல்லை. எனது கணவரை என்னுடன் சேர்த்து வைத்து குழந்தையுடன் நிம்மதியாக வாழ வழிவகை செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை பெற்றுக்கொண்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை மகளிர் போலீசார் மூலம் விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்