தோகைமலை தெற்கு வேதாசலபுரத்தை சேர்ந்தவர் சாகுல்அமீது. இவரது மகள் சகானாபானு (வயது 19). இந்தநிலையில் நேற்று முன்தினம் சகானாபானுவின் பெற்றோர் புதுக்கோட்டையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு மீண்டும் தங்களது வீட்டிற்கு வந்துள்ளனர். அப்போது வீட்டில் இருந்த சகானபானுவை காணவில்லை. இதையடுத்து உறவினர் வீடு மற்றும் பல்வேறு இடங்களில் தேடியும் சகானாபானு கிடைக்கவில்லை. இதுகுறித்து ஹஜீராபேகம் கொடுத்த புகாரின்பேரில், தோகைமலை ேபாலீசார் வழக்குப்பதிந்து, மாயமான சகானாபானுவை தேடி வருகின்றனர்.