நல்லம்பள்ளி அருகே பெண்ணிடம் 3 பவுன் நகை பறிப்பு மர்மநபர்களுக்கு போலீசார் வலைவீச்சு

Update: 2022-11-26 18:45 GMT

நல்லம்பள்ளி:

நல்லம்பள்ளி அருகே வடக்குதெரு கொட்டாவூர் கிராமத்தை சேர்ந்தவர் குழந்தைசாமி. இவருடைய மனைவி செல்வி (வயது 45). செல்விக்கு நேற்று முன்தினம் உடல் நிலை சரியில்லை என தெரிகிறது. இதனால் அவர் சிகிச்சைக்காக கணவருடன் நல்லம்பள்ளிக்கு மொபட்டில் மருத்துவமனைக்கு சென்றார். பின்னர் சிகிச்சையை முடித்துவிட்டு மொபட்டில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது வீட்டின் அருகே செல்வி இறங்கி நின்றபோது மொபட்டில் பின்தொடர்ந்து வந்த 3 மர்மநபர்கள் செல்வி கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் நகையை பறித்து சென்றனர். இதுகுறித்து செல்வி கொடுத்த புகாரின்பேரில் அதியமான்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண்ணிடம் நகைபறித்து சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்