எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 பொதுத்தேர்வில் முதலிடம் பெற நடவடிக்கை எடுக்கப்படுமா?

நடப்பு கல்வி ஆண்டிற்கான எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 பொதுத்தேர்வில் முதலிடம் பெற மாவட்ட பள்ளி கல்வித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு்ள்ளது.

Update: 2023-02-07 19:28 GMT


நடப்பு கல்வி ஆண்டிற்கான எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 பொதுத்தேர்வில் முதலிடம் பெற மாவட்ட பள்ளி கல்வித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு்ள்ளது.

25 ஆண்டுகள்

விருதுநகர் மாவட்டம் பள்ளி கல்வியில் 25 ஆண்டுகளாக எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்து சாதனை படைத்து வந்தது. கடந்த 2001-2002-ம் ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி. பொது தேர்வில் 93.2 சதவீத தேர்ச்சியும், பிளஸ்-2 தேர்வில் 94.3 சதவீத தேர்ச்சி பெற்ற மாவட்டம் ஆகும். அதிகபட்சமாக கடந்த 2016 -2017-ல் எஸ்.எஸ்.எல்.சி.யில் 98.5 சதவீத தேர்ச்சியும், பிளஸ்-2 ேதர்வில் 97.85 தேர்ச்சியும் பெற்றிருந்தது.

இதனைத் தொடர்ந்து கடந்த 4 ஆண்டுகளாக மாவட்டம் பொதுத்தேர்வில் முதலிடத்தை இழந்தது. இதற்கிடையில் கொரோனா பாதிப்பால் ஆன்லைன் கற்றல் முறை அமலுக்கு வந்த நிலையில் பொதுத்தேர்வில் அனைவருக்கும் தேர்ச்சி என்ற நிலை எடுக்கப்பட்டது.

சிறப்பு பயிற்சி

கடந்த காலங்களில் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை கற்றலில் குறைவான திறனுள்ள மாணவர்களுக்காக சிறப்பு ஆசிரியர்களை கொண்டு உரிய பயிற்சி வழங்க ஏற்பாடு செய்தது. இதன் காரணமாக மாவட்டம் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வில் சாதனை படைத்தது.

இடையில் இம்மாதிரியான சிறப்பு பயிற்சி ஏற்பாட்டில் தொய்வு ஏற்பட்டதால் மாவட்டம் பொதுத்தேர்வில் முதலிடத்தை இழக்கும் நிலை ஏற்பட்டது. பெருந்தலைவர் காமராஜர் பிறந்த மாவட்டம் கல்வியில் சாதனை படைக்கும் மாவட்டம் என்ற பெயர் இருந்து வந்த நிலையில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேல் சாதனையை தொடர முடியவில்லை.

தற்போது கொரோனா பாதிப்புக்கு பின்பு பள்ளிகள் முழுமையாக இயங்கி வரும் நிலையில் நடைபெறவுள்ள எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 பொதுத் தேர்வில் மாவட்டம் மீண்டும் முதலிடம் பெற மாவட்ட பள்ளி கல்வித்துறை உரிய பயிற்சி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்