கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்கப்படுமா?- நாடாளுமன்றத்தில் வைகோ கேள்விக்கு மத்திய இணை மந்திரி பதில்

கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்கப்படுமா என்று மாநிலங்களவையில் வைகோ எம்.பி எழுப்பிய கேள்விக்கு மத்திய இணை மந்திரி வி.முரளீதரன் பதிலளித்துள்ளார்.

Update: 2022-07-25 07:42 GMT

சென்னை,

பாக் ஜலசந்தியில் உள்ள கச்சத்தீவில் உரிமை மற்றும் மீன்பிடி உரிமையை மீட்டெடுப்பதற்காக, பிரதமர் சமீபத்தில் சென்னைக்கு வருகை தந்தது உள்பட பல சந்தர்ப்பங்களில் தமிழக அரசு பரிந்துரை செய்திருக்கிறதா? இந்திய மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் துன்புறுத்தப்பட்டு கைது செய்யப்படுவதை கருத்தில்கொண்டு கச்சத்தீவை மீட்பதற்காக இலங்கையுடன் இந்தியா பேச்சுக்களை நடத்துமா? என்று மாநிலங்களவையில் வைகோ எம்.பி. கேள்வி கேட்டார்.

இதற்கு பதில் அளித்து, வெளியுறவுத்துறை இணை மந்திரி வி.முரளீதரன் கூறியதாவது:-

இந்திய அரசாங்கம் 1974 மற்றும் 1976-ல் இலங்கையுடன் கடல் எல்லை ஒப்பந்தங்களை மேற்கொண்டது. ஒப்பந்தங்களின் கீழ் கச்சத்தீவு தீவு, இந்தியா-இலங்கை சர்வதேச கடல் எல்லைக்கோடு இலங்கை பக்கத்தில் உள்ளது.

தற்போது கச்சத்தீவு விவகாரம் தொடர்பான வழக்கு இந்திய சுப்ரீம் கோர்ட்டில் உள்ளது. இந்திய மீனவர்கள் தொடர்பான பிரச்சினைகள் ராஜதந்திர வழிகளில் நிறுவப்பட்ட வழிமுறைகள் மூலம் இந்திய மீனவர்கள் தொடர்பான பிரச்சினைகள் எடுத்துக் கொள்ளப்படுகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்