பா.ஜ.க.வில் இணைந்தது ஏன்..? - விஜயதாரணி எம்.எல்.ஏ விளக்கம்

காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏ. விஜயதாரணி இன்று காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்.

Update: 2024-02-24 09:09 GMT

புதுடெல்லி,

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை என தேர்தல் களம் களை கட்டியுள்ளது. இந்த நிலையில் விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏ. விஜயதாரணி இன்று காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்.

கட்சியில் தனக்கு முக்கியத்துவம் தரப்படவில்லை என்று காங்கிரஸ் தலைமை மீது விஜயதாரணி அதிருப்தியில் இருப்பதாகவும் பா.ஜ.கவில் இணையப்போவதாகவும் கடந்த சில நாட்களாகவே தகவல்கள் பரவி வந்த நிலையில் இன்று அவர் பா.ஜ.க.-வில் இணைந்துள்ளார்.

இதையடுத்து விஜயதாரணி பா.ஜ.க.வில் இணைந்தது துரதிர்ஷ்டவசமானது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். மேலும் அவர், விஜயதாரணி மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு திரும்பி வருவார் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பா.ஜ.க-வில் சேர்ந்தது ஏன் என எம்.எல்.ஏ. விஜயதரணி விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் டெல்லியில் அளித்த பேட்டியில்,

காங்கிரசில் இருந்து விலகி பா.ஜ.க-வில் இணைந்ததில் மகிழ்ச்சி. மிகப் பெரிய தலைவர் பிரதமர் மோடியின் கீழ் இந்தியா பெரும் வளர்ச்சியை கண்டுள்ளது. பா.ஜ.க-வை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் அக்கட்சியில் இணைந்துள்ளேன்.

பா.ஜ.க. ஆட்சியில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கபடுகிறது. பிரதமர் மோடியின் சேவை நாட்டிற்கு மிகவும் அவசியமானதாக உள்ளது. நடந்தவை நடந்ததாக இருக்கட்டும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்