காங்கிரசுக்கு கமல்ஹாசன் ஆதரவு கொடுத்தது ஏன்? - கே.எஸ்.அழகிரி விளக்கம்
காங்கிரசுக்கு கமல்ஹாசன் ஆதரவு கொடுத்தது ஏன்? என கே.எஸ்.அழகிரி விளக்கம் அளித்தார்.
மதுரை,
மதுரை விமான நிலையத்தில் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் உள்ள எல்லா அரசியல் கட்சிகளுமே தென் தமிழகத்திற்கு சேது சமுத்திர திட்டம் வேண்டும் என சொல்லி இருக்கின்றனர். எனவே தமிழர்களின் ஒட்டுமொத்த விருப்பம் இது. சேது சமுத்திர திட்டம் ரூ.2500 கோடி திட்டத்தில் ஏறக்குறைய ரூ.600 கோடி செலவு செய்த பிறகு அந்தத் திட்டம் நிறுத்தப்பட்டிருக்கிறது. அந்த திட்டம் நிறுத்துவதற்கு சொல்லப்பட்ட காரணங்கள் சரியானது அல்ல.
சூயஸ் கால்வாய், பனாமா கால்வாய் போன்றவை அந்த பகுதியின் வளர்ச்சிக்கு பெரும் வித்தாய் அமைந்துள்ளன.. சேது சமுத்திர திட்டம் வந்தால் தென் தமிழகத்தில் பொருளாதாரம் மிகப்பெரிய வளர்ச்சி அடையும். எனவே ஒட்டுமொத்த தமிழர்களின் கருத்துக்காக மீண்டும் குரல் கொடுக்க வேண்டும் என்பதற்காக தற்போது வந்துள்ளோம்.
ஈரோடு இடைத்தேர்தலில் எங்களுடைய கூட்டணி மகத்தான வெற்றி பெறும். தமிழக வளர்ச்சிக்கு நாங்கள் பாடுபடுவோம். அதற்கு எடுத்துக்காட்டாகத்தான் கமல்ஹாசன் தற்போது எங்களுக்கு ஆதரவாக வந்துள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.