அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு வந்த பெண் எங்கே?

பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு வந்த பெண் எங்கே? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2022-12-25 21:59 GMT

நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தை சேர்ந்தவர் ரோஜா (வயது 40). இவர் பாளையங்கோட்டை முருகன்குறிச்சி மனவளர்ச்சி குன்றியோர் இல்லத்தில் தங்கி இருந்தார். சம்பவத்தன்று இவரை 2 பெண் பணியாளர்கள் ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு நின்று கொண்டிருந்த போது ரோஜா திடீரென்று மாயமானார். இதுகுறித்து சமூக பணியாளர் அனீஸ் ஸ்டீவ் ஆஸ்டின் மருத்துவ கல்லூரி மருத்துவமனை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரோஜா, அவராகவே எங்கேனும் சென்று விட்டாரா? அல்லது அவரை யாரும் கடத்தி சென்று விட்டார்களா? என்று விசாரணை நடத்தி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்