பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

குத்தாலத்தில் ஜமாபந்தி நிறைவு: பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் உதவி கலெக்டர் வழங்கினார்

Update: 2022-05-25 17:44 GMT

 குத்தாலம்:

குத்தாலம் தாசில்தார் அலுவலகத்தில், மயிலாடுதுறை உதவி கலெக்டர் பாலாஜி தலைமையில் கடந்த 17-ந்தேதி தொடங்கி நடைபெற்று வந்த ஜமாபந்தி நேற்று நிறைவு பெற்றது. இதில், குத்தாலம் வட்டத்திற்கு உட்பட்ட குத்தாலம், பாலையூர், மங்கநல்லூர் சரகங்களைச் சேர்ந்த 59 வருவாய் கிராமங்களின் கணக்குகள் சரிபார்க்கப்பட்டது. மேலும், பொதுமக்களிடமிருந்து வீட்டுமனை பட்டா வேண்டி 79 மனுக்களும், பட்டா மாற்றம் வேண்டி 48 மனுக்களும், ஓய்வூதியம் வேண்டி 146 மனுக்கள் என மொத்தம் 289 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது தீர்வு காணப்பட்ட 12 பயனாளிகளுக்கு முதியோர் மற்றும் விதவை உதவித்தொகை ரூ.1000 வழங்குவதற்கான ஆணை, வீட்டுமனைப்பட்டா, பட்டா மாற்ற ஆணை, வேளாண்மை துறை சார்பில் மானியத்தில் தார்பாய் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை உதவி கலெக்டர் பாலாஜி வழங்கினார். இதில் தாசில்தார் கோமதி, சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் சங்கர், வட்ட வழங்கல் அலுவலர் காந்திமதி, தலைமையிடத்து துணை தாசில்தார் விஜயகுமார், மண்டல துணை தாசில்தார் சுந்தர், உதவி வேளாண்மை இயக்குனர் வெற்றிவேலன் மற்றும் வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்