நாய்கள் கண்காட்சியில் பங்கேற்க முன்பதிவுக்கான இணையதளம்

தஞ்சையில், வருகிற 11-ந்தேதி நடைபெறும் நாய்கள் கண்காட்சியில் பங்கேற்பதற்கான இணையதளத்தை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைத்தார்.

Update: 2023-03-08 18:45 GMT


தஞ்சையில், வருகிற 11-ந்தேதி நடைபெறும் நாய்கள் கண்காட்சியில் பங்கேற்பதற்கான இணையதளத்தை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைத்தார்.

நாய்கள் கண்காட்சி

தஞ்சையை அடுத்த மாதாக்கோட்டையில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் செயல்படும் மிருகவதை தடுப்பு சங்க வளாகத்தில் நாய்கள் கண்காட்சி வருகிற 11-ந் தேதி(சனிக்கிழமை) நடக்கிறது. இந்த கண்காட்சியில் நாய்கள் பங்கேற்கும் வகையில் முன்பதிவு செய்வதற்கான புதிய இணைய தள முகவரியை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேற்று தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

விழிப்புணர்வு ஏற்படுத்த...

தஞ்சை மாதாக்கோட்டை சாலையில் அமைந்துள்ள மிருகவதை தடுப்பு சங்க வளாகத்தில் நாய்கள் கண்காட்சி காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நடக்கிறது.

நாய் இனங்களை பாதுகாக்கவும், செல்லப்பிராணிகள் மீதான நமது ஈர்ப்பை அதிகப்படுத்தவும், ஆதரவற்று சுற்றி திரியும் நாய்களை தத்தெடுக்கவும், பிராணிகள் வதை கொடுமையில் சிக்காமல் இருக்கவும், விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்த நாய்கள் கண்காட்சி நடத்தப்படுகிறது.

இணையதளத்தில் பதிவு செய்யலாம்

இந்த கண்காட்சியில் கோம்பை, சிப்பிப்பாறை, கண்ணி, அலங்கு, கட்டைக்கால், மண்டைநாய் உள்ளிட்ட நாட்டு வகை இனங்களும், டாபர்மேன், ேலபரடார், ஜெர்மன் ஷெப்பர்டு, ராட்வீ்லர், பொமரேனியன், டால் மெட்டியன், பூடில், சைபீரியன் ஹஸ்கி, காக்கர் ஸ்பேனியல் உள்ளிட்ட பிறவகை இனங்கள் என 100-க்கும் மேற்பட்ட நாய்கள் பங்கேற்கின்றன. நாய்களின் அணிவகுப்பும், அதன் திறமைகளை வெளிப்படுத்தும் நிகழ்வுகளும் நடைபெறுகிறது.

இந்த கண்காட்சியில் பங்குபெறும் நாய்களுக்கு மிருகவதை தடுப்பு சங்கத்தின் சார்பில் கட்டணம் இல்லாமல் ேரபீஸ் தடுப்பூசி, சான்றிதழ் மற்றும் நினைவு பரிசு வழங்கப்படும். இதில் பங்கேற்க 7418364555 என்ற எண்ணிலோ அல்லது www.spcathanjavur.org. என்ற இணைய தள முகவரியில் பதிவு செய்து கொள்ளலாம். இந்த கண்காட்சியை பார்வையிட கட்டணம் கிடையாது. அனுமதி இலவசம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் தமிழ்ச்செல்வன், மாநகர் நல அலுவலர் டாக்டர் சுபாஷ்காந்தி மற்றும் மிருகவதை தடுப்பு சங்க அலுவலர் சாரா உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்